26. திருநீலநக்க நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 26
இறைவன்: அயவந்தீஸ்வரர்
இறைவி : இருமலர்க்கண்ணம்மை
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : ?
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சீயாத்தமங்கை (திருச்சாத்தமங்கை)
முக்தி தலம் : ஆச்சாள்புரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி - மூலம்
வரலாறு : சோழ நாட்டில் சாத்தமங்கை என்னும் தலத்தில் அந்தணர் குலத்தில் அவதாரம் செய்தார். ஒரு நாள் வழிபாடு செய்வத்ற்காக மனைவியுடன் ஆலயம் சென்றார். அங்கே சுவாமி மீது சிலந்தி ஒன்று விழுந்தது. அதனைக் கண்ட மனைவியார் அதனை அப்புறப்படுத்த வாயால் ஊதினார். சுவாமி மீது எச்சில் படும் வண்ணம் ஊதினாயே என்று நாயனார் மனைவியைக் கோபித்து, உன்னை நான் துறந்தேன் என்று சொல்லி நீங்குகிறார். மனைவியார் ஆலயத்திலேயே இருக்க நாயனார் வீட்டிற்கு சென்றார். அன்று இரவு அவரது கனவில் இறைவர், அன்பனே உன் மனைவி ஊதிய இடம் தவிர என் மேனியில் சிலந்தியால் ஏற்பட்ட கொப்புளங்களைப் பார் என்று காட்டினார். நாயனாரும் மனம் திருந்தி உடனே சென்று மனைவியை அழைத்து வந்தார்.
முகவரி : அருள்மிகு. அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை – 609702, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. முத்துக்குமாரசாமி குருக்கள்

தொலைபேசி : 04366-2700073, அலைபேசி : 9842471582

இருப்பிட வரைபடம்


மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் 
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில் 
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் 
நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார்

- பெ.பு. 1846
பாடல் கேளுங்கள்
 மனைவியார்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க